சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமான அறிவிப்பு! எச்சரிக்கையோடு பார்க்கப்பட வேண்டிய விடயம் -
மட்டக்களப்பு, நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட தலைமை காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
தற்போது சிங்கள மக்களோடு, தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்படுங்கள் என்ற ஒரு அறிவிப்பு சொல்லப்பட்டது. இது மிக எச்சரிக்கையோடு பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
ஏனெனில் நாங்கள் இந்த நாட்டில் அனைத்து மக்களோடும் சேர்ந்து எங்களுடைய சம அந்தஸ்தை பேணிக்கொண்டு வாழ விரும்புபவர்கள்.
இதில் சிங்கள மக்களோடு சேர்ந்து முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்க போவதில்லை.
அதுரலிய ரதன தேரர் தாம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த பிரேரணைக்கு வலு சேர்க்கும் முகமாக உண்ணாவிரம் மேற்கொண்டு அதனை பௌத்த துறவிகளின் மன்றுக்கு கொண்டு சென்றிருக்கின்றார். இதனை அவர் நாடாளுமன்றத்திலேயே கையாண்டிருக்க முடியும். இது போன்றே ஞானசார தேரரை ஜனாதிபதி விடுதலை செய்யும் போது அவர் அரசியல் விடயங்களில் ஈடுபடமாட்டார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அக்கதைகள் எல்லாம் மாறிவிட்டன.
உண்மையில் கண்டியில் நடைபெற்ற பௌத்த பிக்குகளை தலைமையாகக் கொண்ட அந்த மக்கள் பேரணி என்பது இந்த நாட்டினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலிலே மிகப் பொருத்தமற்ற ஒரு செயற்பாட்டைக் கொண்டு வரும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கின்றது.
அரசியல் தீர்வுகளிலே பௌத்த துறவிகள் சம்மந்தப்படும் போதெல்லாம் அரசியல் நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு அது சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய வெற்றியாக தான் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றது என்பதும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினராகிய தமிழ் சமூகம் என்பதும் வரலாறு தந்த பாடம்.
சுதந்திரம் அடைந்தததை தொடர்ந்து வந்த எல்லா விடயங்களிலும் இது நிகழ்ந்திருக்கின்றது. முழுமையாக சொல்ல போனால் சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய இன்னுமொரு முகம் தற்போது அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது இந்த நாட்டினுடைய அரசியலுக்கு பொருத்தமானதாக இருக்காது. மாறாக குந்தகம் விளைவிக்க கூடியதாகவே இருக்கும். தற்போது நடைபெறுகின்ற விடயங்கள், சிறுபான்மை சமூகத்தினுடைய அபிலாசைகள் எல்லாம் முற்று முழுதாக முடக்கப்படுகின்ற செயற்பாட்டுக்கு அடித்தளமாகவே அமையும் என தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமான அறிவிப்பு! எச்சரிக்கையோடு பார்க்கப்பட வேண்டிய விடயம் -
Reviewed by Author
on
June 06, 2019
Rating:

No comments:
Post a Comment