ICCPR சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன்-சமூக ஊடகத்தால் விபரீத விளைவு
மன்னார் காட்டாஸ்பத்திரி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் முகப்புத்தகத்தின் ஊடாக அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாகவும் புகைப்படம் ஒன்றை நபர் ஒருவருக்கு அனுப்பியதாகவும் முஸ்லீம் நபர் ஒருவர் மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினை தொடர்ந்து. குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறையில் உள்ளார்.
கடந்த 21 திகதி இலங்கையில் இடம் பெற்ற குண்டு தாக்குதல்களை தொடர்ந்து இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டது அதன் பின்னர் நிபந்தனைகளுடன் அணுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் முக நூல் கணக்கில் இருந்து ஒரு புகைப்படத்தை அனுப்பியதாகவும் குறித்த புகைப்படம் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் முஸ்லீம் நபர் பேசாலை பொலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு 14.05.2019 மன்னார் நீதவான் நீதி மன்றில் ஆயர் படுத்தப்பட்டு இன்றுவரை சிறையில் உள்ளார்.
குறித்த சந்தேக நபரின் உழைப்பினை நம்பி வயதான தந்தை உட்பட குடும்பம் இருந்து வருவதாகவும் இவ் சந்தேக நபர் ஒருமாதத்தை அண்மித்த காலமாக சிறையில் இருப்பதாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் மிக அண்மையில் தாக்கல் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை என்பதாலும்
குறித்த வழக்கு தொடருனர் முகப்புத்தகத்தில் அனுப்பபட்ட புகைப்படத்தை இதுவரை மன்றில் சமர்பிக்கவில்லை என்பதன் அடிப்படையிலும் சட்டத்தரணி எஸ்.டினேஸன் ஊடாக குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு கோரி பினை மணுவானது மேல் நீதி மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழக மாணவர்களும் ICCPR அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
June 06, 2019
Rating:

No comments:
Post a Comment