திருகோணமலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக 12302 பேர் பாதிப்பு -
திருகோணமலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே. சுகுணதாஸ் இன்று தெரிவித்துள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் பணிப்புரைக்கமைய, பிரதேச செயலாளர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும், திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 9 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 3913 குடும்பங்களைச் சேர்ந்த 12302 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப்பணிகளில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் 17 உழவு இயந்திர பவுசர்களும், 6 மோட்டார் லொறி பவுசர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் கிண்ணியா, வெருகல், தம்பலகாமம், குச்சவெளி, கந்தளாய், சேருவில, மூதூர், பட்டினமும் சூழலும் , மொரவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருமலை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக 12302 பேர் பாதிப்பு -
Reviewed by Author
on
July 19, 2019
Rating:

No comments:
Post a Comment