"உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியல்...
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அதில், அந்த நாடுகளின், நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படும்.
இதை வைத்து உலகநாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உலகநாடுகளின் ஊழல்கள் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார் 100-க்கும் 88 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திலும், நியூசிலாந்து 87 மதிப்பெண்களுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 85 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், கனடா 81 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், பிரித்தானியா 80 புள்ளிகளுடன் 11 இடத்திலும், ஜெர்மனியும் அதே 11-வது இடத்திலும், இலங்கை 38 புள்ளிகளுடன் 89-வது இடத்திலும் உள்ளது.
உழல் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், புருண்டி 170 மதிப்பெண்களுடன் 170-வது இடத்திலும், லிபியாவும் அதே மதிப்பென்களுடன் 170-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான், ஈகுவடோரியல் கினி, கினி பிஸா ஆகிய நாடுகள் 16 மதிப்பெண்களுடன் 172-வது இடத்திலும், வடகொரியா, ஏமன் 14 புள்ளிகளுடன் 176-வது இடத்திலும், தெற்கு சூடான், சீரியா 13 புள்ளிகளுடன் 178-வது இடத்திலும், சோமாலியா 10 புள்ளிகளுடன் 180-வது இடத்திலும் உள்ளன.

மொத்தம் ஆய்வுக்கு 180 நாடுகள் எடுத்து கொள்ளப்பட்டதாகவும், இதில், 20 நாடுகள் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் 16 நாடுகள் ஊழல்களில் தொடர்ந்து திளைத்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த ஒரு நாடும் முழு அளவிலான மதிப்பெண்ணைப் பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், அந்த நாட்டில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றாலும் வெளிநாடுகளில் தொழில் செய்யும் அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் டாப் 10 பட்டியல்...
Reviewed by Author
on
July 30, 2019
Rating:
No comments:
Post a Comment