16800 பட்டதாரிகளுக்கு அரச வேலை! பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு -
அரசாங்கத்துறையில் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் 16,800 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக 3800 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிகழ்வு நாளை அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களில் இருந்து 200 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய 22 மாவட்டங்களில் இருந்தும் மாவட்டமொன்றுக்கு 40 பேர் வீதம் 880 பட்டதாரிகளும் தங்களுக்கான நியமனங்களை நாளைய தினம் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
நியமனங்கள் வழங்கப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஏனைய பட்டதாரிகளுக்கு இம்மாதம் 31ம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 01ம், 02ம் திகதிகளில் அந்த மாவட்டங்களின் மாவட்ட செயலகங்கள் ஊடாக நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
16800 பட்டதாரிகளுக்கு அரச வேலை! பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு -
Reviewed by Author
on
July 30, 2019
Rating:

No comments:
Post a Comment