ஆப்கானின் தலைநகரை உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. 34 பேர் பலி!
காபூலில் உள்ள புல்-இ-மகமவுத் கான் பகுதியில் சக்தி வாய்ந்த கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. முதலில் அங்குள்ள கட்டிடம் ஒன்றில் பயங்கரவாதிகள் நுழைந்ததாகவும், அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பாகவே வெடிபொருள் நிறைந்த காரை பயங்கரவாதிகள் வெடிக்க செய்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியானது, அமைச்சக கட்டிடத்தின் ஒரு கிளை, ஒரு விளையாட்டு அரங்கம், தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் மற்றும் வீடுகள் நிறைந்த பகுதிக்கு அருகில் உள்ளதாகும்.

இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. முதற்கட்டமாக இந்த தாக்குதலில் 12 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 68 பேர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.


ஆப்கானின் தலைநகரை உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. 34 பேர் பலி!
Reviewed by Author
on
July 02, 2019
Rating:
No comments:
Post a Comment