மன்னார்-FRC மற்றும் NTT நிறுவனங்கள் உளநல மேம்பாட்டிற்கான உதவித் திட்டம்.
FRC மற்றும் NTT நிறுவனங்கள் இணைந்துவழங்கிய உளநல மேம்பாட்டிற்கான உதவித் திட்டம்.
யுத்தம் மற்றும் கட்டமைக்கப்பட்டவன்முறைகளால் மனவடுவிற்குமுகங்கொடுத்தவர்களினைசமூகத்துடன் மீளிணைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் நிதி அனுசரனையில் குடும்பபுனர்வாழ்வு நிலையத்தினால் வழங்கப்பட்ட உளவளத்துணை அமர்வுகளை நிறைவுசெய்து கொண்ட பயனாளிகளுக்கான சிறுதொழில் முயற்சிக்கு உதவிவழங்கும் நிகழ்வானது மன்னார் குடும்பபுனர்வாழ்வு நிலையத்தினால் ஆனிமாதம் 25 ஆந் திகதி மாந்தைமேற்கு பிரதேசசெயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பிரதமவிருந்தினராக மாந்தைமேற்கு பிரதேசசெயலாளர் திரு. கேதீஸ்வரன்அவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக
நீலன் திருச்செல்வம் அறக்கட்டளை நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். மனவடுவிற்குமுகங்கொடுத்தோர் தம்மீதானநம்பிக்கையைதொடர்ச்சியாகப் பேணுவதுடன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தம்மாலான பங்களிப்பினை வழங்கஊக்குவித்து சமூகத்துடன்மீளிணைக்கும் நோக்கிலேயே இச் சிறுசுயதொழில் முயற்சிக்கானஉதவிவழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்-FRC மற்றும் NTT நிறுவனங்கள் உளநல மேம்பாட்டிற்கான உதவித் திட்டம்.
Reviewed by Author
on
July 02, 2019
Rating:

No comments:
Post a Comment