திருகோணமலை-இழுவைப் படகு மூலம் பயணிக்கும் மக்கள் கோரிக்கை -
திருகோணமலை - வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட புன்னையடி பகுதியில் களப்புக் கடலுக்கு மேலால் போடப்பட்டுள்ள இழுவைப் படகு மூலமாக பயணம் செய்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதனால் பாலமொன்றை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புன்னையடி,கல்லடி, இலங்கைத்துறை முகத்துவாரம், சீனன்வெளி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புன்னையடி பாதையை கடந்து வெருகலில் உள்ள வைத்தியசாலை,பாடசாலை,பிரதேச செயலகம், பிரதேச சபை ஏனைய அத்தியாவசிய தேவைகள் போன்றவற்றுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
மேலும் மறு திசையில் இழுவைப் படகு இருக்குமாக இருந்தால் அங்கிருந்து யாராவது இழுத்து வரும் வரை இங்கிருப்பவர்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
மேலும் மேலே குறிப்பிட்ட கிராமங்கள் கடல் பகுதியை அண்டியிருப்பதால் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டால் இந்த இழுவை படகு மூலமாகவே மறு திசைக்கு செல்ல வேண்டியுள்ளது.
புன்னையடி பாலத்தை அமைத்துத் தருவதாக பலரும் வந்து பார்வையிட்டுச் சென்ற போது இன்னும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு புன்னையடியிலிருந்து வெருகலுக்குச் செல்ல பாலமொன்றை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருகோணமலை-இழுவைப் படகு மூலம் பயணிக்கும் மக்கள் கோரிக்கை -
Reviewed by Author
on
July 18, 2019
Rating:

No comments:
Post a Comment