பெருமை மற்றும் கவலையை ஒருசேர உணர்கிறேன் – தெரேசா மே
பெருமை மற்றும் கவலை ஆகியவற்றை ஒருசேர உணருவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலின் போதே இக்கருத்துக்களை முன்னவைத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமராக நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய கடைசி நேர்காணலின் போது, தனது பதவிக்காலம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தெரேசா மே, தான் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் காலப்பகுதியில் கவலை மற்றும் பெருமை ஆகியவற்றை ஒருசேர உணர்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மூன்று வருட கால பதவிக் காலத்தில் மகத்தானதொரு பெறுபேற்றை அடைந்துள்ளதாகவும் மே குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் செய்ய எதிர்பார்த்தவை இன்னும் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் தான் விலகுவது கவலை அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது பிரித்தானிய அரசியலில் பிரதான பேசுபொருளாக அமைந்துள்ள நிலையில், குறித்த பதவிக்காக போட்டியிடும் பொரிஷ் ஜோன்சன் அல்லது ஜெரேமி ஹண்ட் பதவியேற்கும் சூழல் உள்ளது.
இதனிடையே, பிரதமர் தெரேசா மே ரவுன் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இருந்து எதிர்வரும் 24ஆம் திகதி வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெருமை மற்றும் கவலையை ஒருசேர உணர்கிறேன் – தெரேசா மே
Reviewed by Author
on
July 14, 2019
Rating:

No comments:
Post a Comment