சனியின் நிலவில் ஆய்வு செய்ய திட்டம்!
சனிக்கிரத்தை சுற்றி வரும் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இதனைத் தெரிவித்துள்ளது.
சனிக்கிரகத்தை சுற்றிவரும் 62 நிலவுகளில் மிகப்பெரிய நிலவான டைட்டனில், ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.
இதற்காக, டைட்டன் நிலவின் பல்வேறு பகுதிகளில் பறந்தும், தரையிறங்கியும் ஆய்வு செய்வதற்கான ட்டிராகன்ஃப்ளை என்ற ஆளில்லா விமானத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
85 கோடி டொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆய்வுத் திட்டத்தின்கீழ், ரொக்கெட் மூலம் ட்டிராகன்ஃப்ளை ஆய்வு விமானம் எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு, 2034-ஆம் ஆண்டு டைட்டன் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சனியின் நிலவில் ஆய்வு செய்ய திட்டம்!
Reviewed by Author
on
July 14, 2019
Rating:

No comments:
Post a Comment