உலகக்கோப்பையில் இலங்கை அணியின் இளம் வீரர் அசத்தல் சதம்! -
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடந்து உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்ததால், இலங்கை அணி துடுப்பாட்டத்தை துவங்கியது.
தொடக்க வீரர்களான குசால் பெரேரா, கேப்டன் கருணரத்னே கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய இளம் வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ நிலைத்து நின்று விளையாடினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தனது முதல் சர்வதேச சதத்தினை உலகக்கோப்பையில் விளாசினார்.

இளம் வயதில் உலகக்கோப்பையில் சதம் விளாசிய மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.பெர்னாண்டோ 100வது பந்தில் இந்த சதத்தினை எட்டினார்.
பின்னர் கோட்ரெலின் பந்துவீச்சில் 104 (103) ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.
உலகக்கோப்பையில் இலங்கை அணியின் இளம் வீரர் அசத்தல் சதம்! -
Reviewed by Author
on
July 01, 2019
Rating:
No comments:
Post a Comment