புலம்பெயர் மண்ணில் தமிழ் சிறார்களின் திறமைகள் -
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்ஸ் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து குறித்த போட்டியை நடத்தியுள்ளது.
குறித்த போட்டிகள் சார்சல் (CENTRE SPORTIF NELSON MANDELA) மைதானத்தில் நேற்றைய தினம் சிறப்பாக ஆரம்பமாகியது.
ஆரம்ப நிகழ்வாக குறித்த மைதானப் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் லெப்ரினன்ட் சங்கரின் நினைவுத் தூபியின் முன்பாக அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
சுடரினை பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பொறுப்பாளர் ஜெயக்குமார், கார்ஜ் சார்சல் பிராங்கோ மற்றும் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் டக்ளஸ் ஆகியோர் மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி வைத்துள்ளனர்.
அதனையடுத்து போட்டி முகாமையாளர் இ.இராஜலிங்கம் போட்டிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். மேலும் பல்வேறுப்பட்ட போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றுள்ளது.
பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டு தமது குழந்தைகளுக்கு உற்சாக மூட்டி தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து எதிர்வரும் 06ஆம் திகதி தெரிவுப்போட்டிகளும், 07ஆம் திகதி இறுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளன.
புலம்பெயர் மண்ணில் எமது தமிழ் சிறார்களின் திறமைகளை கண்டு வியந்து மகிழ அனைவரையும் வருமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
புலம்பெயர் மண்ணில் தமிழ் சிறார்களின் திறமைகள் -
Reviewed by Author
on
July 02, 2019
Rating:

No comments:
Post a Comment