ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்ற இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
ஐரோப்பிய நாடுகள் உட்பட பத்து நாடுகளுக்கு இலவச வீசாவை வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
10 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசா வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய பிரித்தானியா, டென்மார், சுவீடன், நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா உட்பட 10 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசா வழங்கப்படவுள்ளது.
குறித்த 10 நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கட்டணமற்ற வீசா வழங்கப்படவுள்ளது.
இதனை பரீட்சார்த்த நடவடிக்கையாக 6 மாதங்களுக்கு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.
இலவச வீசா நடைமுறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்ற இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
Reviewed by Author
on
July 30, 2019
Rating:

No comments:
Post a Comment