கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் விகாரை! சற்று முன் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு -
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்துக்கு கடிதம் எழுதும் படி தனது இணைப்புச் செயலாளருக்குத் தான் கூறவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் தன்னிடம் கூறியதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அப்படி கடிதம் எழுதப்பட்டிருந்தால் இது பற்றி விசாரிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனின் கேட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
இந்த விடயம் தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் தூது குழுவை சந்திக்க என்னிடம் அவர் உடன்பட்டார். இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும்.
ஜனாதிபதியுடனான உரையாடலையடுத்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமானப் பணிக்கும் கன்னியாவில் இடம்கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவை அழைத்து சற்றுமுன் தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் விகாரை! சற்று முன் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு -
Reviewed by Author
on
July 18, 2019
Rating:

No comments:
Post a Comment