முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் வைத்தியசாலையில் அடிக்கல் நாட்டும் வைபவம் -
முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் வைத்தியசாலையின் வைத்தியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பகல் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கான மருத்துவ தேவைகளை வழங்கும் நோக்கில் இவ்விடுதி நிர்மாணிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் நிதியொதுக்கீட்டின் 7.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிப்பு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.உமாசங்கர், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் வைத்தியசாலையில் அடிக்கல் நாட்டும் வைபவம் -
Reviewed by Author
on
July 02, 2019
Rating:

No comments:
Post a Comment