மன்னாரில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்...
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்றைய தினம் திங்கட்கிழமை(22) காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு 2013 ஆண்டுக்கு பின்னர் உரியமுறையில் வழங்கப்படவில்லை எனவும் குறித்த விடயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இடம் பெற்று வருகின்றது
குறித்த பணிபஸ்கரிப்பு காரணமாக மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் உட்பட அனைத்து உப அஞ்சல் அலுவலகத்தின் பிரதான பணிகள் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் தங்கள் தேவைக்காக தபாலகம் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் .
எனினும் மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் உப அலுவலகங்களில் உள்ளக பணிகள் மற்றும் அவசர சேவைகள் பரிசாட்திகளுக்கான அணுமதி அட்டைகள் முதியோர் ஓய்வுதிய பணம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்...
Reviewed by Author
on
July 22, 2019
Rating:

No comments:
Post a Comment