இலங்கையில் சற்று முன்னர் மூன்று பெண்கள் பரிதாபமாக பலி -
இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் தாய் மகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
சூரியவெவ 11ஆம் மைல்கல் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர்.
31 வயதான தாய், அவரது மகள் மற்றும் இன்னுமொரு பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் நுவரெலியாவில் வீதி ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகள் உயிரிழந்தனர்.
தற்போதும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சற்று முன்னர் மூன்று பெண்கள் பரிதாபமாக பலி -
Reviewed by Author
on
July 19, 2019
Rating:

No comments:
Post a Comment