ஆற்றில் குளித்த நபரின் மூளையில் ஏறிய உயிரினம்.. பின்னர் நேர்ந்த பரிதாபம்! -
வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த ஜூலை 12ஆம் திகதி அங்குள்ள ஃபேண்டசி நதியில் குளித்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு தொடர்ந்து உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவரிடம் சென்ற அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது மூளையில் ஒரு செல் உயிரியான அமீபா இருப்பது கண்டறியப்பட்டு, தொடர் சோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தகுந்த சிகிச்சை அளிக்கும் முன்னரே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நக்லேரியா ஃபோலேரி என்ற இந்த வகை அமீபாக்கள் ஆறு, குளம் போன்ற நன்னீரில் அதிகம் வாழக்கூடியவை.
கோடைக்காலங்களில் இந்த அமீபாக்களால் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நீரில் உள்ள இந்த வகை அமீபாக்கள் மூக்கு வழியாக மனிதனின் உடலுக்குள் நுழைந்து நேராக மூளைக்கு செல்கிறது.
அதன் பின் மூளை திசுக்களை இவை சிதைக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளை வீக்கம் ஏற்படும், அடுத்தபடியாக மரணம் நிகழும். அப்படித்தான் குறித்த நபரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த 1962ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டு 145 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வெறும் 4 பேர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்றில் குளித்த நபரின் மூளையில் ஏறிய உயிரினம்.. பின்னர் நேர்ந்த பரிதாபம்! -
Reviewed by Author
on
July 29, 2019
Rating:

No comments:
Post a Comment