உங்களுக்கு கை,கால் முட்டி கருப்பாக உள்ளதா.....
மூட்டுகளில் கருமை வருவதற்கு காரணம், அங்கே மெலனின் செல்களின் சுரப்பு அதிகமாகியிருக்கும்.
அதுமட்டுமின்றி இறந்த செல்கள் தங்கி, அந்த இடம் பாதிப்படைந்து கருமையாக அசிங்கமாக காணப்படும்.
இதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவழித்து பியூட்டி பாலர்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
இதனை வீட்டில் இருந்து கூட சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
தேவையானவை
- சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
- சமையல் சோடா – 2 டீ ஸ்பூன்
- சோற்றுக் கற்றாழை – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் மேலே சொன்ன மூன்றையும் நன்றாக கலந்து, மூட்டுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும்.பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம்.
தினமும் இதனை செய்யுங்கள் 2 வாரங்களிலேயே கருமை போய்விடும். இன்னும் விரைவான பலன் கிடைக்க தினம் காலை மாலை என இருவேளைகளிலும் பயன்படுத்துங்கள்.
இந்த கலவை மூட்டுகளில் தினமும் தேய்த்து வந்தால், அங்கு தேங்கியிருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, புதிய செல்கள் உருவாகும்.
இவை சருமத்தில் ஆழமாக சென்று, அழுக்குகளை நீக்குகிறது. இதனால் மெல்ல மெல்ல கருமை போய்விடும்.
சமையல் சோடா கருமையை போக்கும் இயற்கையான ப்ளீச்சாக செயல்படுகிறது. சருமத்தை பளிச்சென்று ஆக்கிவிடும்.

உங்களுக்கு கை,கால் முட்டி கருப்பாக உள்ளதா.....
Reviewed by Author
on
August 06, 2019
Rating:
No comments:
Post a Comment