எலும்புகளைப் பாதுகாக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? -
இதனை உணவுமுறைகள் மற்றும் உடற்பயிற்சியின் மூலமாகவே 80 சதவிதம் சரி செய்துவிடலாம்.
உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க என்னென்ன உணவுகள் எடுக்கலாம் என்பதை பார்ப்போம்.
பால்
பாலில் புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ்,பொட்டாஸியம்,வைட்டமின் K12 ஆகியவை நிறைந்துள்ளன. தினசரி பால் உட்கொண்டால் பெண்களுக்கு மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு மிகவும் நல்லது.
சீஸ்
சீஸில் சத்து தரும் பாக்டீரியாவான புரோபையோட்டிக் ( Probiotic) உள்ளது. இந்தவகை பாக்டீரியா,மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்கும்.
கீரை வகைகள்
கீரை வகைகளில் எலும்பை பலப்படுத்தும் கால்சியம், தாதுக்கள், வைட்டமின் கே, ஃபோலேட்,வைட்டமின் சி நிறைந்துள்ளன.
எள்
எள்னில் தாமிரம்,மாங்கனீஸ் , பொட்டாசியம்,கால்சியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம்( Molybdenum) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கு அடிப்படையாக அமையும் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை ( Elastin) இணைக்கும் பணியை எள்ளிலுள்ள தாமிரம் செய்கிறது.
பீன்ஸ்
பீன்ஸில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகின்றது. இது எலும்புகளை உறுதியாக்கி வலிமை தரும்.
முட்டை
முட்டையில் வைட்டமின் டி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்திருக்கிறது. அது எலும்புகளின் வலிமை அதிரிக்கும்.
கேழ் வரகு
100 கிராம் கேழ்வரகில் 300 மி.கி கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
மீன்
மத்தி மீன் வகைகளில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் உறிஞ்சப்படும் அளவை அதிகப்படுத்தக்ககூடியது.
நட்ஸ்
பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளில் கால்சியம், பொட்டாசியம், மற்றும் புரதம் நிறைந்துள்ளன. எனவே சத்தான எலும்புகள் பெற தினமும் நட்ஸ் சாப்பிடுவது சிறந்தது.
பழங்கள்
ஆரஞ்சு, லெமன் ஆகியவை வைட்டமின் சி நிறைந்தவை. எனவே கால்சியம் நிறைந்த உணவைச் சாப்பிட்ட பின்னர் இந்தப்பழங்களை உண்பாதால் கால்சியம் உறிஞ்சப்படுவது அதிகரிக்கும்.
எலும்புகளைப் பாதுகாக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? -
Reviewed by Author
on
August 07, 2019
Rating:

No comments:
Post a Comment