அழிவின் விளிம்பிலுள்ள சர்க்கஸ் கலை.. தொழில்நுட்பத்தின் மூலம் மீட்டெடுத்த ஜேர்மனி!
சர்க்கஸ் கலை என்பது 250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. ஆனால், விலங்குகள் பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளால் பெரும்பாலான நாடுகளில் இந்த கலை முடிவுக்கு வந்துள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள இந்த கலையை மீட்கும் நடவடிக்கையை ஜேர்மனி எடுத்துள்ளது. Hologram எனும் புதிய digital தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்க்கஸ் கலையை ஜேர்மனி மீட்டெடுத்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு யானை, குதிரை, குரங்கு, மீன் போன்ற உயிரினங்கள் மெய்நிகர் காட்சியாக வடிவமைக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒளிரும் விளக்குகளால் உருவாக்கப்படுகிறது.

இதனைப் பார்க்கும்போது உண்மையாகவே நமது கண் முன் விலங்குகள் சாகசம் செய்வது போன்று இருக்கும். ஜேர்மனியின் லியூபெக் நகரில் உள்ள ரோன்கல்லி சர்க்கஸ் இதனை காட்சிப்படுத்தி வருகிறது.
ரோன்கல்லி சர்க்கஸில் 20 வகையான நிகழ்ச்சிகளை, 2 மணிநேரம் பார்த்து ரசிக்க 1,500 பேர் ஒரே நேரத்தில் அமரும் மாடமும், நடுவில் சாகச வட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விலங்குகள் மட்டுமின்றி, கோமாளிகளின் Hologram நிகழ்ச்சிகளும், அவர்கள் நேரில் தோன்றும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.


அழிவின் விளிம்பிலுள்ள சர்க்கஸ் கலை.. தொழில்நுட்பத்தின் மூலம் மீட்டெடுத்த ஜேர்மனி!
Reviewed by Author
on
August 07, 2019
Rating:
No comments:
Post a Comment