வரலாற்றில் இடம் பிடித்த தமிழ் பெண்... பதவியேற்பு விழாவில் கிடைத்த உச்ச கட்ட மரியாதை:
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழக மாநில பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார். இவர் தலைவராக இருந்த போது, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்கு அதிக முயற்சிகள் எடுத்து வந்தார்.
இவரைப் பற்றி இணையத்தில் பலரும் மீம்ஸ் போட்டாலும், அதுவே இவருக்கு சாதகமாக மாறியது. அது பாஜகவுக்கு இலவச விளம்பரம் போன்று மாறியது.
இதையடுத்து தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு தெலுங்கானாவின் ஆளுநர் பதவி கொடுக்கபப்ட்டது. தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
அவர் வந்து இறங்கியதும், அவருக்கு பூங்கொத்து கொடுத்து உச்ச கட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார் தமிழிசை.
பின் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில ஆளுநராக பொறுப்பேற்று கொண்டார்.
தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் தமிழிசை.





வரலாற்றில் இடம் பிடித்த தமிழ் பெண்... பதவியேற்பு விழாவில் கிடைத்த உச்ச கட்ட மரியாதை:
Reviewed by Author
on
September 09, 2019
Rating:
No comments:
Post a Comment