சமுர்த்தி கூட்டத்தில் அரசியல் பேசியமைக்கு முல்லைத்தீவு மக்கள் எதிர்ப்பு -
முல்லைத்தீவு- செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற சமுர்த்தி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் சார்பில் அரசியல் பேசியமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
செல்வபுரம் பொதுநோக்கு மண்டபத்தில சமுர்த்தி குழுக்களின் தலைவர் தலைமையில் இன்று சமுர்த்தி பொதுகூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது சமுர்த்தி தொடர்பான கூட்டம் என்று அழைக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் கட்சி சார்ந்த அரசியல் விடயங்கள் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் சமுர்த்தி கூட்டத்தில் அரசியல் பேசியமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மற்றும் அரசியற்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி கூட்டத்தில் அரசியல் பேசியமைக்கு முல்லைத்தீவு மக்கள் எதிர்ப்பு -
Reviewed by Author
on
September 09, 2019
Rating:

No comments:
Post a Comment