முல்லைத்தீவில் திறக்கப்பட்ட பண்ணை -
குறித்த நிகழ்வு இன்று லண்டனில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி பங்களிப்புடன் பண்ணை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அமீர், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். குறித்த பண்ணையின் பெயர்ப்பலகையினை இயக்குனர் இமயம் உள்ளிட்ட அதிதிகள் திறந்து வைத்துள்ளதுடன், தொடர்ந்து பண்ணையினை லண்டன் கற்பக விநாயகர் ஆலய ஸ்தாபகர் கோபாலகிருஷ்ணன் நாடா வெட்டி திறந்து வைத்துள்ளார்.
தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் அமீர் ஆகியோர் ஈழ மண்ணினதும், தமிழினதும், ஈழத்து போராட்டம் தொடர்பிலும் உரையாற்றியுள்ளார். இந்நிகழ்வின் நிறைவில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவிப்பது தொடர்பிலும், தமிழ் மக்கள் பேரவையின் சுயாதின குழுவினால் முன்னெடுக்கப்படும் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாடு தொடர்பிலும் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் திறக்கப்பட்ட பண்ணை -
Reviewed by Author
on
October 05, 2019
Rating:

No comments:
Post a Comment