பிரதமர் மோடி,சீன ஜனாதிபதி தமிழகம் வருகை! இலங்கை தமிழர்கள் வெளியேற்றம் -
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரின் வருகையை தொடர்ந்து, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 24 மணி நேர கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ள மாமல்லபுரம் விடுதிகளில் இருக்கும் இலங்கை தமிழர்கள் மற்றும் திபெத்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலங்குவானூர்தி இறங்கு தளம், இருவரும் சுற்றி பார்க்க உள்ள கற்கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தும் சிசிடிவி மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாமல்லபுரத்துக்க வரும் சுற்றுலா பயணிகள், வெளியேறுவோர், விடுதிகளில் நீண்ட நாட்களாக தங்கி உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது.
24 மணி நேர கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ள மாமல்லபுரம் விடுதிகளில், இலங்கை தமிழர்கள் மற்றும் திபெத்தியர்கள் இருந்தால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதுபோல, கிழக்கு கடற்கரை சாலை முழுதும் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி,சீன ஜனாதிபதி தமிழகம் வருகை! இலங்கை தமிழர்கள் வெளியேற்றம் -
Reviewed by Author
on
October 05, 2019
Rating:

No comments:
Post a Comment