ஈரானில் தொடரும் பதற்றம் - 1000 பேர் கைது..! 36 பேர் பலி.. 100 வங்கிகள்-காவல்நிலையம் தீக்கிரை:
வெள்ளிக்கிழமை ஈரான் அரசாங்கம் பெட்ரோல் மற்றும் ரேஷன் விலையை 50 சதவிகிதம் உயர்த்தியது, இந்த நடவடிக்கை பணம் தேவைப்படும் குடிமக்களுக்கு உதவும் நோக்கமாகக் கொண்டது என குறிப்பிட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து 93க்கும் மேற்பட்ட ஈரானிய நகரங்களில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
கடந்த 48 மணி நேரத்தில் ஈரான் முழுவதும் 1,000 போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 100 வங்கிகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும்,
மத்திய நகரமான இஸ்பஹானில் போராட்டகாரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் விலை உயர்வுக்கு ஆதரவளித்தார், நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறை போராட்டங்களுக்கு ஈரான் எதிரிகள் மற்றும் வெளிநாட்டு எதிரிகள் மீது அவர் குற்றம் சாட்டினார்.
இந்த முடிவால் சிலர் கவலைப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாசவேலை மற்றும் தீவிபத்துக்கள் கொடூரர்களால் செய்யப்படுகின்றன, நம் மக்களால் அல்ல என ஈரானிய உச்ச தலைவர் அரசு தொலைக்காட்சியில் நேரடி உரையில் கூறினார்.
சில ஈரானிய அமைச்சர்கள் அரசாங்கத்தை தனது முடிவைத் திருத்துமாறு கட்டாயப்படுத்தும் வழிகளைப் பற்றி விவாதிக்கத் திட்டமிட்ட நிலையில் கமேனியின் ஞாயிற்றுக்கிழமை உரைக்கு பின்னர் தங்கள் தீர்மானத்தை வாபஸ் பெற்றதாக ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் புலனாய்வு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் அது கலவரங்களிலிருந்து வேறுபட்டது. கலவரங்கள் மூலம் நாட்டில் பாதுகாப்பின்மையை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கூறினார்.
இதற்கிடையில், ஈரானிய தேசிய பாதுகாப்பு ஆணைம், எரிபொருள் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வரைவு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்தவும் மேற்பார்வையிடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்ததாக உள்ளுர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது நாளாக எரிபொருள் விலை உயர்வு குறித்த ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இணைய சேவையை ஈரான் முற்றிலுமாக நிறுத்திவிட்டது என்று இணைய பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் நெட் பிளாக்ஸ் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானில் தொடரும் பதற்றம் - 1000 பேர் கைது..! 36 பேர் பலி.. 100 வங்கிகள்-காவல்நிலையம் தீக்கிரை:
Reviewed by Author
on
November 18, 2019
Rating:

No comments:
Post a Comment