லண்டன் ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம்
லண்டன் ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார்.
ஆலயத்தின் நிர்வாக சபையினர் இலங்கையின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆளுநர் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்போது வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஊடாக இதனை செய்வதற்கு முடியுமென்று குறிப்பிட்டதுடன், இது தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடமாகாண சுகாதார அமைச்சில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டிருக்கும் 20 அம்புலன்ஸ் வண்டிகளை நடமாடும் புத்தக நிலையங்களாக மாற்றி வடமாகாணத்தின் கிராமங்களுக்கு அனுப்புவதற்கு முயற்சிப்பதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆலய நிர்வாகத்திடம் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் வடமாகாணத்தில் தொழில் முயற்சியொன்றினை ஆளுநர் செயலகத்துடன் இணைந்து உருவாக்குவதற்கும் தயாராக இருப்பதாகவும் ஆலய நிர்வாகத்தினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
லண்டன் ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம்
Reviewed by Author
on
November 01, 2019
Rating:

No comments:
Post a Comment