இந்த ஆண்டிற்கான புக்கர் விருதுக்கு கனடா,பிரித்தானிய எழுத்தாளர்கள் தெரிவு
இந்த ஆண்டிற்கான புக்கர் விருதுக்கு கனடாவை சேர்ந்த 79 வயதான பெண் எழுத்தாளர் மார்க்கரெட் ஒட்வுட்,(Margaret Odwood,) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் பிரித்தானியாவைச் சேர்ந்த 60 வயதான பெண் எழுத்தாளர் பெர்னர்டீன் எவரிஸ்டோவும் (Bernardine Everisto) இந்த விருதினை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
கடந்த 1992ஆம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது.
எனினும், மார்க்கரெட் ஓட்வுட் எழுதிய தி டெஸ்டமென்ட்ஸ் (The Testaments), எவரிஸ்டோ எழுதிய vOjpa Girl Woman, Other ஆகிய இரண்டு நாவல்களும் சம அளவிலான தகுதி பெற்றன.
இதன்காரணமாக விதியை தளர்த்தி இருவருக்கும் புக்கர் விருதை பகிர்ந்தளிக்க தேர்வுக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான புக்கர் விருதுக்கு கனடா,பிரித்தானிய எழுத்தாளர்கள் தெரிவு
Reviewed by Author
on
December 07, 2019
Rating:

No comments:
Post a Comment