சம்பந்தன் அமெரிக்க தூதுவருடன் பேசுவதில் பயனில்லை! அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை -
அதிகாரப் பரவல் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தீர்வுகாண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்போதைய அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேசத்தின் அழுத்தங்களால் இலங்கையில் எதனையும் சாதித்துவிட முடியாது என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் உணர்த்துவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் யாப்பா அபேவர்தன இதனை கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில், அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
“தற்போது இருக்கின்ற அதிகாரங்கள் இப்போது போதுமானவை. 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த தடையில்லை. ஆனால் 13வது திருத்தத்திற்கும் அப்பாற் செல்வதாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உட்பட பொதுமக்கள் கருத்துக் கணிப்பிற்கு முதலில் செல்ல வேண்டிவரும்.
இவை குறித்து தற்போதிருக்கும் அரசாங்கத்திடம் பேசவேண்டும். மாறாக அமெரிக்கத் தூதுவருடன் சம்பந்தன் பேசி பயனில்லை. இங்குள்ள அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கத் தூதுவருக்கு முடியாதுதானே.
ஆகவே வெளிஅழுத்தங்களை ஏற்படுத்தி இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தல் உறுதிபடுத்திவிட்டது. இவர்களது வாக்குகள் இல்லாவிட்டால் ஜனாதிபதி தெரிவுசெய்யமுடியாது என்ற விடயம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து நாடுகளையும் நற்புறப்பேணி, எமது சுயாதீனத்தை, அடையாளத்தை வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
சம்பந்தன் அமெரிக்க தூதுவருடன் பேசுவதில் பயனில்லை! அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை -
Reviewed by Author
on
December 07, 2019
Rating:

No comments:
Post a Comment