ஈரானுக்கு பேரடி கொடுக்க பிரித்தானியா அதிரடி திட்டம்..! டிரம்ப் முக்கிய அறிவிப்பு -
அதேசமயம், நாம் அதை முடிவுக்கு கொண்டுவர போகிறோம் என்றால், அதை மாற்றுவோம், அதை டிரம்ப் ஒப்பந்தத்துடன் மாற்றுவோம் என நேற்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
இந்த நடவடிக்கையை தான் நாம் முன்னெடுக்க வேண்டும். இது ஒரு சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். '
அமெரிக்க கண்ணோட்டத்தில் இது ஒரு குறைபாடுள்ள ஒப்பந்தம், அது காலாவதியாகிவிட்டது, மேலும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் புறக்கணிக்கப்பட்டது என்று ஜான்சன் கூறினார்.
மேலும், அமெரிக்காவின் பார்வையில் இது பல, பல தவறுகளைக் கொண்டுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் பெரிய ஒப்பந்தக்காரர். ஜே.சி.பி.ஓ.ஏ-ஐ மாற்றவும், அதற்கு பதிலாக டிரம்ப் ஒப்பந்தத்தைப் பெறவும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என ஐரோப்பிய நாடுகளுக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் திட்டத்திற்கு உடன்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், ஈரான் ஒப்பந்தத்தை டிரம்ப் ஒப்பந்தத்துடன் மாற்ற வேண்டும் என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். நான் உடன்படுகிறேன்! என் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு பேரடி கொடுக்க பிரித்தானியா அதிரடி திட்டம்..! டிரம்ப் முக்கிய அறிவிப்பு -
Reviewed by Author
on
January 15, 2020
Rating:

No comments:
Post a Comment