பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு-முஷாரப் மரண தண்டனையில் அதிரடி திருப்பம்...!
தேச துரோக வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாபதிபதி முஷாரப்பை குற்றவாளி எனக் கண்டறிந்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.
பாகிஸ்தானில் 1999-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முஷாரப் 2001 முதல் 2008 வரை நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனக்கு மரண தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தற்கு எதிராக லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரப் தரப்பில் வழக்கு போடப்பட்டது.
திங்களன்று இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், நாடுகடத்தப்பட்ட முஷாரப்பிற்கு ஆதரவாக, சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அதிரடியாக ரத்து செய்தது.
இந்த மூலம் முஷாரப் ‘ஒரு சுதந்திர மனிதர்’ என்று ஒரு வழக்கறிஞர் கூறினார். இருப்பினும், இந்த வழக்கை வேறு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க முடியும் என கூறப்படுகிறது.
உயர் தேசத்துரோக குற்றச்சாட்டு 2013 முதல் நிலுவையில் உள்ளது. இது 2007ல் முஷாரப் அரசியலமைப்பை இடைநிறுத்தியது தொடர்பானது, அப்போது அவர் தனது பதவிக் காலத்தை நீட்டிக்கும் நோக்கில் அவசரநிலையை அறிவித்தார்.
நீதிமன்றத்தின் தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாததால், முஷாரப் 2016ல் பாகிஸ்தானை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டு துபாயிக்கு நாடு கடத்தப்பட்டார்.
பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு-முஷாரப் மரண தண்டனையில் அதிரடி திருப்பம்...!
Reviewed by Author
on
January 14, 2020
Rating:

No comments:
Post a Comment