மட்டக்களப்பில் பொறியியல் துறைக்குள் தெரிவாகி சாதனை படைத்த இரட்டையர்கள் -
உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த இரட்டை சகோதரர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு மட்டக்களப்பு - கல்லடி, நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையினால் இன்று நடாத்தப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் விழிப்புலனற்ற தம்பதியினரின் இரட்டை பிள்ளைகளான இதயராஜன் தனுஜன், இதயராஜன் அனுஜன் ஆகியோர் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற நிலையில் கணித பிரிவில் தனுஜன் மாவட்ட மட்டத்தில் 06ம் இடத்தினையும், அனுஜன் 18வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து திருகோணமலை ரொட்டறிக் கழகத்தினரால் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான விழிப்புலனற்றோருக்கான கற்றல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பில் பொறியியல் துறைக்குள் தெரிவாகி சாதனை படைத்த இரட்டையர்கள் -
Reviewed by Author
on
January 14, 2020
Rating:

No comments:
Post a Comment