அண்மைய செய்திகள்

recent
-

100000 வேலைவாய்ப்பு–மன்னாரில் 5பிரதேசச் செயலகங்களில் இடம் பெற்று வரும் நேர்முகத் தேர்வு-(video,photos)

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் இன்றைய தினம் புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

-மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலகங்களிலும் இன்று புதன் கிழமை காலை முதல் இடம் பெற்று வருகின்றது.

-குறித்த நேர்முகத்தேர்வின் போது ஒரு அரச அதிகாரியும் 2 இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் மன்னார் மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர்.மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 1578 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/XuP0-wgVrXE






100000 வேலைவாய்ப்பு–மன்னாரில் 5பிரதேசச் செயலகங்களில் இடம் பெற்று வரும் நேர்முகத் தேர்வு-(video,photos) Reviewed by Author on February 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.