அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உண்ணாவிரதம் 5 ஆவது நாளாக தொடர்கின்றது-படங்கள்

தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று தொடரும் நிலையில்,மன்னார் நகர சபை உறுப்பினர்கள் இன்று மாலை நேரடியாக சென்று கலந்தரையாடியுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ்(வயது-39) என்ற நபரே மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் குறித்த உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

எனினும் பல்வேறு தரப்பினர் சென்று கலந்துரையாடி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று புதன் கிழமை மாலை மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் ஜேசப் தர்மன் ஆகியோர் சென்று கலந்துiராடியுள்ளனர்.



மன்னாரில் உண்ணாவிரதம் 5 ஆவது நாளாக தொடர்கின்றது-படங்கள் Reviewed by Author on February 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.