முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தரொருவர் பலி -
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், குடும்பஸ்தர் உள்ளூர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி - உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான பாலையா பால்ராஜ் ஜெகதீஸ்வரன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தரொருவர் பலி -
Reviewed by Author
on
February 06, 2020
Rating:

No comments:
Post a Comment