வவுணதீவில் தமிழ் பொலிஸ் அதிகாரி கொலை! இருவர் அதிரடியாக கைது -
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை தேவாலய வீதயைச் சேர்ந்த 31 வயதுடைய முகமட் அஸ்மி மற்றும் வவுணதீவு, நாவற்குடா, ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முகமட் அஸ்மிக்கு, காயங்கள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இதேவேளை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமொன்று காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் வவுணதீவில் உள்ள மூன்றாம் கட்டை பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன்,வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
February 06, 2020
Rating:

No comments:
Post a Comment