இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை -
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையொன்று தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வு எதிர்வரும் 24ம் திகதியில் இருந்து மார்ச் 20ம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இதன்போது பெப்ரவரி 27ம் திகதியன்று இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பில் அங்கத்துவ நாடுகள் கலந்துரையாடவுள்ளன.
இந்தநிலையில் குறித்த அறிக்கையின் மேலோட்ட பதிவு இன்று வெளியாகியுள்ளது.
அதில் இலங்கையின் அனுசரணையும் கொண்டு வரப்பட்ட 30-1 யோசனையின் கீழ் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டமையை மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டு காட்டியுள்ளார்.
எனினும் நிறுவனங்களை மீளமைத்தல், மனித உரிமைகள் மீள் எழாமை போன்ற விடயங்களில் இன்னும் இலங்கை அரசாங்கம் முழுமையை அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 30-1 யோசனையின் படி இலங்கையின் அனைத்து சமூகங்களும் நிரந்தரமான சமாதானமிக்க வாழ்க்கையை கொண்டு வரவேண்டியது அவசியமாகும். எனவே இந்த யோசனையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் ஆணையாளர் மிச்செயல் பச்செலெட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த யோசனையின் படி பெரும்பாலான விடயங்கள் இலங்கையின் உள்ளூர் நடைமுறைகளாகவே இருந்துள்ளன.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தார். அத்துடன் இராணுவம் மற்றும் சிவில் அமைப்புக்களை உள்ளடக்கிய தேசிய கலந்தாலோசனை சபையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30-1 யோசனை, அனைத்து சமூகங்களும் எதிர்பார்க்கும் பல தசாப்தங்கள் நிலவிய முரண்பாடுகளை கலைதல் மற்றும் பயங்கரவாதம் மற்றும் ஏகாதிப்பத்தியத்தை தோற்கடித்தல் போன்றவற்றை வலியுறுத்துவதாக பச்சேலெட் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 19வது அரசியல் யாப்பு திருத்தத்தின் கீழ் சுயாதீன நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் முகவர்கள் மனித உரிமை காப்பாளர்களை மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் குடும்பங்களை கண்காணித்தல் மற்றும் தொந்தரவு செய்தல் போன்ற விடயங்களை உடனடியாக கைவிடவேண்டும் என்று ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
இன மற்றும் மத ரீதியாக சிறுபான்மையினராக வாழ்வோருக்கு எதிராக தேசியவாதிகள் மேற்கொண்டு வரும் வெறுத்தக்க பேச்சுக்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தநிலையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தாமை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளை மீளமைக்காமை போன்ற விடயங்கள் இலங்கையின் அனைத்து சமூக மக்களின் உரிமை மீறல்களுக்கு உறுதிப்பாடு இல்லை என்பதையே காட்டும்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி நீண்டகால பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை -
Reviewed by Author
on
February 20, 2020
Rating:

No comments:
Post a Comment