அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இளைஞர்கள் முறைப்பாடு-(VIDEO,PHOTOS)

கடந்த சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவு மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோ ஊடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த முறைப்பாடுகளில் ஒரு பகுதியாக மன்னார் நகர் பிரதேச செயலகத்தை சாராத சில இளைஞர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து பேரூந்துகளில் வருகை தந்து  தங்களுடைய வாக்குகளை செலுத்தியதாகவும் ,அடையாள அட்டையில் வேறு பகுதிகளில் வசிக்கும் முகவரி உள்ளவர்கள்  மன்னார் பிரதேச செயலக பிரிவை சேர்ந்தவர்கள் என இணையத்தின் ஊடாக பதிவு செய்து வாக்களித்துள்ளதாகவும்,அதே நேரத்தில் 8 மணி அளவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்ட நிலையிலும் கால தாமதமாகவே வாக்குப்பதிவு ஆரம்பித்ததாகவும் அதற்கான மேலதிக நேரம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும்,அடையாள அட்டை இல்லாத தற்காலிக இளைஞர் அடையாள அட்டைகளை வைத்திருந்த இளைஞர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை எனவும் அதனால் அனேகமான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.

-மேலும் அதே நேரத்தில் வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் எமது பகுதி இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே குறித்த பிரச்சினை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு தலையிட்டு மீள் தேர்தல் அல்லது  தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு பாதிக்கப்பட்ட இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இளைஞர்கள் முறைப்பாடு-(VIDEO,PHOTOS) Reviewed by Author on February 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.