கொரோனா அச்சுறுத்தல்: ஆஸ்திரேலியாவில் 2 பேருக்கு மேல் கூட தடை
ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், பொது இடங்களில் 2 பேருக்கு மேல் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட பழங்குடிகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையின் படி, ஆஸ்திரேலியாவில் பொது விளையாட்டு மைதானங்கள், உடல்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் நாளை முதல் மூடப்பட்டிருக்கும். முன்பு திருமண நிகழ்விற்கு 5 பேர், இறப்பு நிகழ்விற்கு 10 பேர் என விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
அடிப்படை தேவைகள், மருத்துவ தேவைகள் தவிர வேறு எவற்றுக்கும் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டு மக்களை அறிவுறுத்தி இருக்கிறது.
தற்போது, வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் சென்ற 1,600 ஆஸ்திரேலியர்கள் ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்பட்டிருப்பார்கள் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தலைமை சுகாதார அதிகாரி ப்ரீண்டன் முர்பி தெரிவித்துள்ள கணக்கின் படி, ஆஸ்திரேலியாவில் 3,978 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ளது என்றாலும் இது போதுமானது அல்ல என அவர் கூறியிருக்கிறார்.
“இதனை நாம் மேலும் குறைக்க வேண்டும். நம்மை கவலையடையச் செய்யும் சமூகப் பரவலை நாம் தடுத்து நிறுத்திட வேண்டும்,” என சுகாதார அதிகாரியான முர்பி தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், கூடுதலாக 1.1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் கொரோனா பாதிப்பு நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை மனநலனுக்கான சேவைகள், குடும்ப வன்முறை, தொலைத்தொடர்பு சுகாதார சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசு ஒதுக்கியிருக்கிறது. முன்னதாக, கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை சமாளிக்கும் விதமாக 17.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் நிவாரண நிதியினை ஒதுக்கியிருந்தது.

Reviewed by Author
on
March 30, 2020
Rating:

No comments:
Post a Comment