வசீகர சிரிப்பு கொண்ட வடகொரியா அதிபர் கிம் மனைவியின் அறியப்படாத மறுபக்கம் -

கொரோனா வைரஸ் எங்கள் நாட்டில் என்று கெத்தாக அறிவித்த நாடு தான் வடகொரியா, உலகமே கொரோனா வைரஸிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டிருக்க, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டியது.
இந்த தகவல் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட, இதற்கிடையில் சமீப நாட்களாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல் நிலை சரியில்லை, அவர் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்திக்கு பின் இனி வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் தங்கையின் ஆட்சி தான் என்று கூறி அவரைப் பற்றி வரலாறுகள் எல்லாம் செய்திகளாக வெளியாகிக் கொண்டிருக்க, வடகொரியாவிற்கு அருகில் இருக்கும் தென்கொரியாவோ, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று இந்த தகவலை மறுத்தது.

ஆனால் கிம் சமீபநாட்களாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலும் கண்ணில் படாமலும் இருப்பதால், இது அமெரிக்காவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், இப்படி ஒரு புரளியை கிளப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் மனைவி குறித்து சர்வதே ஊடகங்கள் கிளர ஆரம்பித்துவிட்டனே என்று தான் சொல்ல வேண்டும்.
தங்கையா மீண்டும் ஆட்சிக்கு? அவருடைய மனைவி என்ன ஆனார்? என்ற பல சந்தேகங்கள் எழ அவரைப் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிம் ஜாங் உன்னின் மனைவியின் பெயர் ரி சோல் ஜூ. இவர் ஆரம்பத்தில் சியர் லீடாராக இருக்க, விளையாட்டு போட்டி ஒன்றில் பார்த்த கிம் ஜாங் உன்னுக்கு இவரை பிடித்து போக, காதலிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதற்கு ரியும் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை கிம் தன்னுடைய தந்தையின் சம்மதத்துடனே செய்துள்ளார்.
தந்தை மீது அவ்வளவு பாசம், மரியாதையோ, அதே பாசம் தான் கிம் ஜாங் உன்னுக்கு தங்கை மீதும் தற்போது வரை இருக்கிறது.
இருவரும் சுவிட்சர்லாந்தில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். கிம்மின் தந்தை மரணத்திற்கு பின்பு தான், அவருடைய தங்கை கிம் யோ ஜாங் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளார்.
தந்தை இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்த அதிகாரிகளுக்கு எல்லாம் தேவையான உத்தரவுகளை பிறப்பித்தது கிம் யோ ஜாங் தானாம், கிம் கூட அப்போது ஓரமாக தான் நின்றுள்ளார்.

அப்போது யோ தான் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுச் செய்தார். கூடவே அண்ணனுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறியடியும் இருந்தார். தந்தை இறப்புக்கு பின் கிம்மிடம் ஆட்சி வர, அவர் தேவையான ஆலோசனைகளை எல்லாம் மனைவியை விட சகோதரியிடமே கேட்டு வந்தார்.
ஏனெனில் தங்கை மீது அந்தளவிற்கு ஒரு நம்பிக்கை, அதேபோல யோவும் அண்ணனுக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளைக் கூறி அவருக்கு ஆட்சியை முழுமையாக எளிதாக்கியுள்ளார்.

இந்த அன்பான உறவை சற்று தள்ளி இருந்தபடியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பவர் தான் மனைவி ரி சோல் ஜூ. இவர் மிகப் பெறிய அறிவுஜீவி குடும்பத்திலிருந்து வந்தவர்.
இவரது அப்பா ஒரு பேராசிரியர். அம்மா ஒரு மருத்துவர். மிகவும் வசதியான குடும்பம். மிகவும் அழகானவர். அருமையாக புன்னகைப்பார்.

இவரது வசீகரமே சிரிப்புதான். அந்த சிரிப்பில் மயங்கித்தான் கிம் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு ஒரு காரணம்.
தன்னை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர் ரி சோல் ஜூ. கணவருக்கு தேவையானதை செய்து கொடுப்பவர். தனது 3 குழந்தைகளையும் அந்தளவிற்கு பாசமாக பார்த்து கொள்பவர்.
கணவரின் வேலைகளில் தலையிடுவது இல்லையாம். குடும்பத்தோடு இருப்பதே அவருக்குப் மிகவும் பிடிக்குமாம். அதை கிம்மும் தடுப்பதில்லையாம்.
கிம் ஜாங் உன்னுக்கு திருமண முடிந்துவிட்டது என்ற தகவலே 2011-ஆம் ஆண்டு தான் வெளியுலகிற்கு தெரியவந்தது.
அதாவது அவரது மாமனார் கிம் ஜாங் இல் மரணமடைந்த சமயத்தில்தான் ரி யின் முகமே வெளியுலகுக்குத் தெரிய வந்தது.

நிறைய பேருக்கு அப்போதுதான் அட கிம் ஜாங் உன்னுக்குத் திருமணம் முடிந்துவிட்டதா? என்ற செய்தியே தெரிய வந்தது. அப்படி ஒரு ரகசியமான நாடுதான் வட கொரியா. இவர்களுக்கு 2009-ல் கல்யாணம் நடந்துள்ளது. சிலர் 2010-என்று சொல்கிறார்கள்.
ஆனால், கிம் இதுவரை திருமணத்தைப் பற்றி பேசியதே இல்லை.
வட கொரியாவைப் பொறுத்தவரை ஆணாதிக்கம் பிடித்த நாடு. அங்கு வீட்டிலும் சரி பொது வெளியிலும் சரி பெண்களுக்கு சம உரிமை கிடையாது.
இதன் காரணமாகவே ரி குறித்தோ மற்றும் தங்கை யோ குறித்தோ அங்கு இதுவரை எந்த பெரிய தகவலும் வெளியுலகுக்குக் கசிந்ததில்லை.

ரி பன்முகத் திறமையானவர். நல்லா பாடுவாராம். நடனம் சூப்பரா ஆடுவாராம். அதேபோல வீட்டு வேலைகளிலும் கெட்டி. குடும்பத்தை நிர்வகிப்பதிலும் சூப்பர் திறமைசாலியாம்.
சீனாவில் இசை குறித்த படிப்பை படித்துள்ளா இவர், வட கொரியாவில் உள்ள உன்ஹாசு ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவிலும் பாடி வந்துள்ளார்.
பின்னர் இந்த குழுவைச் சேர்ந்த அனைவரையும் கிம் சுட்டுக் கொன்று விட்டார். என்ன காரணம் என்ற தெரியவில்லை. ஆனால் இதில் யாராவது கிம்மின் மனைவியிடம் ஏதாவது வாலாட்டியிருக்கலாம் என்ற தகவல் மட்டுமே உள்ளது. தற்போது வரைஉண்மை காரணம் தெரியவில்லை.
கடந்த 2018-ல் தனது மனைவியுடன் சீனாவுக்கு கிம் சென்றிருந்த போது, ரி போட்டிருந்த ஆடை அவ்வளவு அழகாக இருந்தது. சீன ஊடங்கள் கிம்மை விட்டு விட்டு ரியைப் பற்றியே நிறைய எழுதித் தள்ளின.
அவரது புகைப்படங்கள் வைரலாகின. இப்படி ஒரு அழகு தேவதையா கிம்முக்கு என்று அத்தனை பேரும் வாய் பிளந்து போயினர்.
ஹாங்காஹ் பேஷன் உலகமே விழுந்து விழுந்து ரி குறித்து பேசி சிலாகித்தது. இவர் ஒரு ஸ்டைல் ஐகான் என்றும் புகழ்ந்து தள்ளினர்.
தற்போது கிம்மின் நிலை என்ன என்று தெரியவில்லை. ரி எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யோ என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்க, இந்த சமயத்தில் ரி அதிரடியாக உள்ளே புகுவாரா அல்லது நாத்தனாருக்கு விட்டுக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வசீகர சிரிப்பு கொண்ட வடகொரியா அதிபர் கிம் மனைவியின் அறியப்படாத மறுபக்கம் -
Reviewed by Author
on
April 23, 2020
Rating:
No comments:
Post a Comment