அண்மைய செய்திகள்

recent
-

-மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வில் விசேட தீர்மானங்கள் நிறை வேற்றம்.


மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சபையின் தலைவர் சாகுல் ஹமீட் முஹமது முஜாகீர் தலைமையில் இடம் பெற்றது.

 குறித்த கூட்டம் நாட்டின் சுகாதார நடை முறைக்கேற்ற வகையில் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கூட்டத்தில் பிரதேசத்தின் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட போதும் குறிப்பாக 3 விடயங்கள் ஏக மனதான தீர்மானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கூட்டம் முறையே இடம் பெற்ற சிறிது நேரத்தின் பின்னர் உறுப்பினர் முன்வைப்பின் போது உறுப்பினர் கதிர் காமநாதன் விஜயன் முள்ளிவாய்கள் சம்பவம் ஒரு வட்டத்திற்குள் எம் இனம் அழிக்கப்பட்ட நினைவு நாள்.

 அனைத்து  உறுப்பினர்களும் ஒரு நிமிட அஞ்சலியின் பின்னர் தமது முன்வைப்பை ஆற்றுவதாக குறிப்பிட்டதன் பின்னர் அனைத்த உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

 பின்னர் தொடர்ந்து தெரிவிக்கையில் எம் இனம் மதத்திற்கு அப்பால் தமிழ் இனம் அழிக்கப்பட்ட நாள்.
 ஏன் நினைவு அனுஸ்ரிக்கப்படவில்லை என்ற கேள்வியை முன்வைத்து தமது நியாய பூர்வமான நிலையை எடுத்துக்கூறியதை அடுத்து இனி வரும் காலங்களில் குறித்த நாளில் நினைவு அஞ்சலி அனுஸ்ரிப்பது எனும் முதலாவது தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ஆதனைத்தொடர்ந்து  உறுப்பினர்   அலி முஹமட் நயீம் உரையாற்றுகையின் போது   இடம் பெயர்ந்து வாழும் எம் மக்கள் மீள் குடியேறி மன்னார் பகுதியில் வாழ்ந்து வரும் எமது பிரதேசத்தை சேர்ந்த மக்கள் புத்தளம் மற்றும் ஏனைய இடங்களில் வாழ்ந்து வரும்  நிலையில் நாட்டின் அசாதார சூழலினால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படமை தொடர்பாக குறிப்பிட்டு 2010ஆம் ஆண்டு குடும்பங்களாக பதியப்பட்டதன் பின்னர் மேலும் பல குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வரும் அவர்களுக்கும் கொடுப்பனவு வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பாக சபையின் ஏகோபித்த தீர்மானத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோர தீர்மானிக்கப்பட்டது.


அதனைத்தொடர்ந்து பிரதேச சபையின் உப தலைவர் முஹமட் இஸ்மாயில் முகமட் இஸதீன் உரையாற்றுகையில்,
 'கொறோனா' நோயில் மரணிக்கும் நபர்களுக்கு தமது மத அனுஸ் தானங்களுடன் இறுதி கிரிகைகள் இடம் பெற வேண்டும்.
 உலக சுகாதார அமைப்பு மத அனுஸ்தானங்களைப் பின் பற்றலாம் என்று குநிப்பிட்ட போதும் அரசாங்கம் மாறாக செயல்படுவது வேதனைக்குறிய விடயமாகும்.

அனைத்து மத மக்களும் உரிய மத கோட்பாடுகளின் அடிப்படையில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற பிரேரணையும் முன் வைக்க குறித்த பிரேரணை ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டு குறித்த விடையமும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
(மன்னார் நிருபர்)
(14-05-2020)

-மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வில் விசேட தீர்மானங்கள் நிறை வேற்றம். Reviewed by Author on May 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.