விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ள இம்மாத ஓய்வூதிய கொடுப்பனவு.....
அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, இதற்கான ஒதுக்கீட்டை இம்மாதம் 20ஆம் திகதிக்குள் நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை விடுத்துள்ளது...
ஓய்வூதியம் பெறும் அனைத்து விவசாயிகளும் மீனவர்களும், இம்மாதம் 22ஆம் திகதி முதல் தபால் நிலையங்களின் மூலமாக ஓய்வூதியக் கொடுப்பனவை எவ்வித கடினமும் இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என, கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின தலைவர், சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தெரிவித்தார்.

No comments:
Post a Comment