அரைச்சொகுசு பஸ் சேவையை நிறுத்துமாறும் தனியார் பஸ் உரிமையாளர்கள் அமைச்சரை கோரியுள்ளனர். ...
அரைச்சொகுசு பஸ்களை சேவையிலிருந்து முற்றாக நிறுவத்துவதற்கு உகந்த
செயற்றிட்டமொன்றை வகுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த
அமரவீர,போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். தற்பொழுது
சுமார் 400 அரைச்சொகுசு பஸ்கள் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு இவை
மக்களை சூறையாடி வருவதாகவும் கூறினார். கல்வி அமைச்சில் நடைபெற்ற பாடசாலை
பஸ் சேவை மற்றும் பஸ் சேவை தொடர்பான கலந்துரையாடலின் போதே அமைச்சர்
மேற்கண்டவாறு கூறினார்.
தனியார் பஸ்களின் வருமானம் பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளதால் அரைச்சொகுசு
பஸ்களின் அளவிற்கு பஸ் கட்டணங்களை ஒன்றரை மடங்கினால் அதிகரிக்குமாறும்
அல்லது அரைச்சொகுசு பஸ் சேவையை நிறுத்துமாறும் தனியார் பஸ் உரிமையாளர்கள்
அமைச்சரை கோரியுள்ளனர்.
ஆனால் எக்காரணம் கொண்டும் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லையென்று
மீண்டும் அறிவித்த அமைச்சர்,அரைச் சொகுசு பஸ்களை சேவையில் இருந்து
நிறுத்துவதாக குறிப்பிட்டார்.
சுமார் 400பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு முடிந்தால்
பதுளை,கதிர்காமம் போன்ற பகுதிகளில் இரவு வேளையில் மாத்திரம் அரைச்சொகுசு
பஸ்களுக்கு சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறும் தேசிய போக்குவரத்து அதிகார
சபைக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார். தனியார் பஸ்களுக்காக 03இலட்சம்
ரூபா கடனுதவி வழங்க ஜனாதிபதி உடன்பட்டதாகவும் அதனை பாடசாலை வேன்களுக்கும்
பெற்றுத் தருமாறும் பஸ் உரிமையாளர்கள் கோரினர்.இது தொடர்பாக ஜனாதிபதியின்
கவனத்திற்கு கொண்டு வருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அரைச்சொகுசு பஸ் சேவையை நிறுத்துமாறும் தனியார் பஸ் உரிமையாளர்கள் அமைச்சரை கோரியுள்ளனர். ...
Reviewed by Author
on
June 18, 2020
Rating:

No comments:
Post a Comment