பிரேஸிலில் 80ஆயிரத்தை கடந்த கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்கள்.......
பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80ஆயிரத்தை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆயிரத்து 251ஆகும்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடான பிரேஸிலில், இதுவரை 21இலட்சத்து 21ஆயிரத்து 645பேர் பாதிப்படைந்துள்ளனளர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், 21,749பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதோடு, 718பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்த ஆறு இலட்சத்து 32ஆயிரத்து 192பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, எட்டு ஆயிரத்து 318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:
Post a Comment