ஓக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்களின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி....
ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதுடன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1,077 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க குறித்த மருந்து வழிவகுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட முடிவுகளில் “சோதனை செய்யப்பட்ட பலருக்கு இந்த தடுப்பூசி, அவர்களின் உடலை ஆதரித்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சுமார் 1,000 தன்னார்வலர்களை உள்ளடக்கிய “முதலாம் கட்ட” ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண்டுபிடிப்புகள் மிகவும் நம்பிக்கைக்குரியவை ஆனால் இது பாதுகாப்பை வழங்குவதற்கு போதுமானதா என்பதை அறிய இன்னும் பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றன என ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment