தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நாசமாய் போய்விட்டது மன்னாரில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவிப்பு
கடந்த காலங்களில் சிலருடைய தவறான வழிநடத்தல் இல்லாத
ஊருக்கு வழி காட்டுகின்றது போன்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால்
தான் எமது மக்கள் இவ்வளவு அவலங்கள் இழப்புகள் துன்பங்களை சந்திக்க வேண்டி
வந்திருக்கின்றது..
நேற்றுடன் கிட்டத்தட்ட 33 வருடங்கள் இலங்கை இந்திய
ஒப்பந்த கைச்சாத்திடப்பட்டு ஆனால் எங்களுடைய மக்களுடைய அபிலாசைகள் எல்லம்
நாசமாய் போய்விட்டது அன்று அந்த இலங்கை இந்திய ஒப்பந்ததை ஏற்று கொண்டு அதை
சரிவர நடைமுறைபடுத்தியிருந்தால் நாம் நடைமுறையிலே சுய நிரணய உரிமையை
பெற்றிருக்களாம் என ஈபிடிபி கட்சியின் செயளாலர் நாயகமும் அமைச்சருமான
டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
இன்று
வியாழக்கிழமை மன்னார் அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்
பின்னர் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர்
மேலும் தெரிவிக்கையில்
சிலர்
தேசிய கட்சிகளுக்கு வாக்காளிக்க வேண்டாம் என தெரிவிக்கின்றனர் ஆனால்
இவர்கள் எல்லாம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் என்ன சென்னார்கள்
ஜனாதிபதியையும் பிரதமரையும் சர்வதேச தூக்குமேடைக்கு கொண்டு செல்வோம் என்று
கூறிவிட்டு இன்று சொல்கின்றார்கள் தங்களுக்கு வாக்களியுங்கள் தாங்கள்
அரசாங்கத்துடன் கதைப்பதாக கடந்த காலத்தில்நல்லாட்சி என்று ஒரு ஆட்சியை
கொண்டுவந்து என்ன செய்தார்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படனரா
அல்லது காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு தீர்வு கண்டார்களா
நிலங்களை விடுவித்தார்களா வேலைவாய்ப்பு கொடுத்தார்களா எவ்வளவே
செய்திருக்காலாம் ஆனால் செய்யவில்லை ஆனால் நான் இம்முறை மக்காளிடம் 20
ஆசங்களை எதிர்பார்க்கவில்லை 5,6 ஆசனங்களையே எதிர்பார்கின்றேன் தேசிய
நல்லிணக்கம் மூலம் அதிகளவானவற்றை செய்வோம்
இம்முறை
ஈபிடிபி கட்சிக்கு வாக்களித்து வீணை சின்னத்தை பலப்படுத்துவதன் ஊடாக
எங்களுடைய மக்கள வடக்கு கிழக்கில் ஐந்துக்கு மேற்பட்ட ஆசங்களை தருவார்கள்
என எதிர்பார்கின்றேன் அது கிடைக்குமாக இருந்தால் சுண்டி சுண்டி ஒன்று
இரண்டு வருடத்துக்குள் மக்களுடைய பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு காண
முடியும் என தெரிவித்தார்..
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நாசமாய் போய்விட்டது மன்னாரில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவிப்பு
Reviewed by Author
on
July 30, 2020
Rating:

No comments:
Post a Comment