கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் கூகுள் நிறுவனம் .......
அனுமதியை வழங்க கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் பல நாடுகளை தாக்கியுள்ள நிலையில் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு வீடுகளில் இருந்து
பணி செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளன.
இந்நிலையில், கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணி செய்வதற்கான அனுமதியை வழங்க திட்டமிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, உயர்மட்ட நிர்வாகிகளுடன் நடாத்திய கலந்துரையாடலைனைத் தொடர்ந்து கடந்த வாரம் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த அனுமதியானது ஏறக்குறைய அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
.
எவ்வாறாயினும் குறித்த விடயம் தொடர்பாக
ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையினால் விளக்கம் கோரப்பட்டதாகவும் அது தொடர்பான விளக்கம் இன்னும் வழங்கப்படவிலை எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் கூகுள் நிறுவனம் .......
Reviewed by Author
on
July 28, 2020
Rating:

No comments:
Post a Comment