மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுயில் ஆயிரம் கிலோ உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில்
உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளுடன் நேற்று புதன் கிழமை இரவு கடற்படையினரால்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடல் வழியாக
'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் வருகையைத் தடுக்கவும், தீவின்
கரையிலிருந்து நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் இலங்கை
கடற்படை தொடர்ந்து கடற்பிராந்தியத்தில் விசேட ரோந்துப் பணிகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
இதன் போது நேற்று புதன் கிழமை இரவு
ஓலைத்தொடுவாய் கடற்கரையில் கடற்படையினர் விசேட ரோந்துப் பணியில் ஈடுபட்ட
போது கடல் மார்க்கமாக மன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட 20 மூடைகளில் பொதி
செய்யப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த மஞ்சள் கட்டி
மூடைகளை கைப்பற்றியதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
மஞ்சள் மூடைகள் கடல் வழியாக மன்னாருக்கு கடத்தப்பட்டிருப்பது விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்ட
உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகள் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர் கொரோனா அச்சம் காரணமாக சுகாதார
திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுயில் ஆயிரம் கிலோ உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது.
Reviewed by Author
on
July 30, 2020
Rating:

No comments:
Post a Comment