வாகன விபத்துக்கள் அதிகரித்ததன் காரணமாக அதிக வேகத்துடன் பயணிக்கும் கொள்கலன் உள்ளிட்ட வாகனங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.....
அதிக வேகத்துடன் பயணிக்கும் கொள்கலன் உள்ளிட்ட வாகனங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துக்கள் அதிகரித்து செல்வதை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களில் கொள்கலன் மற்றும் டிப்பர் வாகனங்களில் மாத்திரம் ஆயிரத்து 845 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாரவூர்திகளை கவனயீனத்துடன் செலுத்துவதால் இவ்வாறான விபத்துகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியுடன் வாகனங்களை செலுத்துவதாலேயே, அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
வாகன விபத்துக்கள் அதிகரித்ததன் காரணமாக அதிக வேகத்துடன் பயணிக்கும் கொள்கலன் உள்ளிட்ட வாகனங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.....
Reviewed by Author
on
July 30, 2020
Rating:

No comments:
Post a Comment