கொரோனா வைரஸ் தொற்றினால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு....
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 556 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 596 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 99ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரொனா தொற்றுக்கு உள்ளான 4 இலட்சத்து 2 ஆயிரத்து 529 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 7 இலட்சத்து 24 ஆயிரத்து 702 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.
அதற்கு அடுத்ததாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 இலட்சத்து 75 ஆயிரத்து 678ஆகவும் டெல்லியில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 747ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment